Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வருகிறது புதிய நடைமுறை! எத்தனால் தயாரிப்பில் மத்திய அரசு அதிரடி!

வருகிறது புதிய நடைமுறை! எத்தனால் தயாரிப்பில் மத்திய அரசு அதிரடி!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியாவில், நடப்பு ஆண்டில் சர்க்கரை உற்பத்தி குறையும் என்று கணிக்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

எல் நினோ தாக்கத்தால் கரும்பு உற்பத்தி குறைந்து, சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்து வரும் நிலையில், கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியாவில், நடப்பு ஆண்டில் சர்க்கரை உற்பத்தி குறையும் என்று கணிக்கப்படுகிறது. எல் நினோ தாக்கத்தால் பருவமழை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு, சர்க்கரை விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

இந்த சூழலில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனம், மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆகிய ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து, புதிய விநியோக ஆண்டுக்காக சுமார் 1,100 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளன.

இதில் கரும்புச் சாறு, சர்க்கரை, சர்க்கரைப் பாகு மற்றும் பி-ஹெவி மொலாசஸ் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவில்லை.
மேலும், புதிய கொள்முதல் ஒப்பந்தத்தில், சி-ஹெவி மொலாசஸ், சேதமடைந்த உணவு தானியங்கள், இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள உபரி அரிசி, மக்காச்சோளம் மற்றும் உயிரி எரிபொருள் தொடர்பான தேசியக் கொள்கையின்கீழ் அனுமதிக்கப்பட்ட பிற மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை நிறுவனங்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்கும் புதிய எத்தனால் விநியோக ஆண்டிலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு மூலப்பொருட்கள் எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பி விடப்படுவது குறைந்து, உள்நாட்டில் சர்க்கரை கிடைப்பதை அதிகரிக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் பிற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
இலவச வேட்டி சேலை உற்பத்தி கூலி நிர்ணயம் திருப்தியில்லை: நெசவாளர்கள்
அடுத்த செய்தி
பலுசிஸ்தானில் நிலநடுக்கம்: 5.7 ரிக்டர் பதிவு

தொடர்புடைய செய்திகள்